காமெடி நடிகர் கஞ்சா கருப்புவின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி நடிகர் கஞ்சா கருப்புவின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் கஞ்சா கருப்பு. இவரின் உண்மையான பெயர் கருப்பு ராஜா.

மதுரையை சேர்ந்த இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடித்த பிதாமகன் என்ற திரைப்படத்தில் கஞ்சா விற்பவராக நடித்திருந்தார்.

Advertisement

அதன் பிறகு இவரை அனைவரும் கஞ்சா கருப்பு என அழைத்ததால் இன்று பலராலும் கஞ்சா கருப்பு எனத்தான் அறியப்படுகிறார்.

இவர் ராம், தென்காசி, சண்டக்கோழி மற்றும் தாமிரபரணி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

இவர் சினிமாவில் படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கினார். ஆனால் இவர் அதில் மொத்த பணத்தையும் இழந்து ஒன்றும் இல்லாதவராக ஆனார்.

இவர் தயாரித்த வேல்முருகன் போர்வெல் என்ற திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது கூட பலருக்கும் தெரியாது.

Advertisement

இதனால் மனமுடைந்த கஞ்சா கருப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். அதன் பிறகு தற்போது பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்தார். அதன் பின் கடந்த 2014-ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடித்தார்.

Advertisement

பணம் சம்பாதிக்கும் ஆசையில் தயாரிப்பில் இறங்கிய இவருக்கு அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை.

இதனால் பல கோடி கடனுக்கு ஆளானார்.  கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சொந்த வீடு மற்றும் சொத்துக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement

படம் தயாரித்து மொத்த சொத்தையும் இழந்துள்ள கஞ்சா கருப்பு இனி தான் படம் தயாரிக்க வாய்ப்பே இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார். இந்நிலையில் கஞ்சா கருப்புவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in