#image_title

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும்.

இந்த சீரியல் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தினந்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர்தான் தீபக்.

இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவருக்கு சின்னத்திரையில் அடையாளம் தேடித் தந்த சீரியல் தான் தென்றல்.

பல ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியலை தொடர்ந்து பத்து வருடங்கள் கழித்து தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் தீபக் நடித்து வருகின்றார்.

இதனிடையே கடந்த 28 ஆம் ஆண்டு தீபக் சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது தீபக் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படங்கள்  இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.