தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம்.

சமீபத்தில் அஜித் நடித்த வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலகினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மயில் திருமேனி இயக்க உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை இப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் தாமதமாகி வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84 ஆகும் நிலையில் அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

 

மேலும் அஜித்தின் தந்தை மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அஜித் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட பலரும் பார்க்காத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.