LATEST NEWS
பட்டுப்புடவையில் மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் தொகுப்பாளினி டிடி… ஒருவேளை அப்படியா இருக்குமோ?… வைரலாகும் போட்டோஷூட்…

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தொகுப்பாளினி டிடி. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி தான் இவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்படும் பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்கு தான் என்ற அளவுக்கு பிஸியாக இருந்தவர்.
அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்பொழுது சின்னத் திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் டிடி என்ற திவ்யதர்ஷினி.
தற்பொழுது இவர் வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. இதற்கு காரணம் அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்படுகிறது. முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் டிடி.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது டிடி மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram