“வரதட்சணையாகக் கேட்ட தார் கார் தரல” மனைவியின் முடியைப் பிடித்து நடுரோட்டில் இழுத்து மிதித்த கணவன்… சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வரதட்சணையாகக் கேட்ட தார் கார் தரல” மனைவியின் முடியைப் பிடித்து நடுரோட்டில் இழுத்து மிதித்த கணவன்… சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வரதட்சணையாகக் கேட்ட சொகுசு கார் மற்றும் பைக் தராததால், கணவன் தனது மனைவியைப் பொதுவெளியில் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. லூதியானாவின் ஜஸ்ஸியா கிரீன் என்க்ளேவ் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலின் போது பெண் அலறிய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்தப் பெண்ணை அவனது பிடியிலிருந்து மீட்டு காப்பாற்றியுள்ளனர். இக்கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ட்விங்கிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார், இவர் சொந்தமாக அழகு நிலையம் (Salon) நடத்தி வருகிறார். இவரது கணவர் ரிதீஷ் சர்மா மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகிறார். ட்விங்கிளின் முதல் விவாகரத்து வழக்கின் போது ஏற்பட்ட பழக்கத்தால், இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான மூன்று மாதங்களிலேயே ரிதீஷ் தனக்கு வரதட்சணையாக ‘தார்’ கார் வேண்டும் எனத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பின்னர் சமரசம் ஏற்பட்டாலும், கடந்த சில நாட்களாக விலை உயர்ந்த பைக் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.

Advertisement

சம்பவத்தன்று பைக் கேட்டு ரிதீஷ் தகராறு செய்ததால், பயந்துபோன ட்விங்கிள் தப்பிக்க நினைத்து அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு ஓடியுள்ளார். ஆனால், துரத்தி வந்த ரிதீஷ் நடுரோட்டில் வைத்து ட்விங்கிளைக் கன்னத்தில் அறைந்து, அவரது முடியைப் பிடித்து இழுத்துத் தரதரவென வீதியில் வீசி, கால்களால் மிதித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து ட்விங்கிள் ஜகத்புரி காவல் சௌகியில் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in