LATEST NEWS
“எனக்கு எல்லாம் வேண்டும்”…. காதலருடன் அந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்தார். பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
அதே சமயம் தனது காதலருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் இணையத்தில் அவ்வப்போது பகிர்வது வழக்கம். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் சேர்ந்து கட்டிப் பிடிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், எனக்கு எல்லாம் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
