LATEST NEWS
“சட்டமன்றத்தில் செய்த அந்த சைகை” தியேட்டர்கள்ல தெறிக்கவிடப் போகுது..’ஜன நாயகன்’ மாஸ் புரோமோவை வெளியிட்டு இணையத்தைக் குலுங்க வைத்த தளபதி விஜய்..!!
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இப்படம், தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து வரும் ஜூலை 23-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகரும் முதலமைச்சருமான விஜய், ‘ஜன நாயகன்’ படத்தின் புதிய புரோமோ வீடியோ ஒன்றை இன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள வேளையில், இத்திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2,500 வரை விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
