தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும் போது ஜிம்மில் நடிகை அமலாபாலும் உடற்பயிற்சி செய்து உள்ளார். அப்போது கமல்ஹாசன் உடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.