நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகி மற்றும் நடன கலைஞரும் ஆவார்.
இங்க தன்னுடைய முன்னாள் கணவர் தனுஷ் படிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
நடிகர் ரஜினி மற்றும் லதா தம்பதியினருக்கு முதலாவது மகளாக பிறந்தவர் தான் ஐஸ்வர்யா. தற்போது இவர் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர். ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
விஜய் டிவியில் நடன போட்டி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் ஜீவா மற்றும் சங்கீதா ஆகியோருடன் இணைந்தே நடுவராக ஐஸ்வர்யா பங்கேற்றார்.
2003 ஆம் ஆண்டு வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசன் உடன் இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணி நடிகையாக அறிமுகமானார்.
பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற உன் மேல ஆசைதான் என்ற பாடலையும் பாடி இருந்தார்.
இவ்வாறு பிசியான ஐஸ்வர்யா ரஜினி கடந்த 2004 ஆம் ஆண்டு தனுசு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் இரண்டு ஆண் பிள்ளைகள் இவர்களுக்கு உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
தன்னுடைய 18 ஆண்டுகால வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய கெரியர், உடல் நலம், குழந்தைகள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
சமூக வலைத்தளங்களிலும் அவரை அதிகமாக பார்க்க முடிகின்றது. அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அவ்வகையில் சமீபத்தில் இவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


