தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர்தான் நடிகர் ராஜ்கிரண்.
நல்லி எலும்பு சாப்பிடுவது என்று சொன்னாலே அனைவரின் நினைவுக்கு வருவது இவர்தான். இவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் இவருடைய பெற்றோர்கள் இவரை ராஜாவாகத்தான் வளர்த்தனர்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய பெற்றோரின் குடும்ப சூழ்நிலையை கருதி சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தார். இவர் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவரின் உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்காக ராஜ்கிரன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ் சினிமாவில் 30 திரைப்படங்கள் மட்டும்தான் இவர் நடித்துள்ளார்.
இவரே சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். 1989 ஆம் ஆண்டு வெளிவந்த என்ன பெத்த ராசாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் படத்தில் மட்டும் தான் பயங்கரமான டெரர். ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் சாந்தமானவர்.
இவரின் முதல் மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
அதனைத் தொடர்ந்து ராஜ்கிரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அவரின் மகள் சமீபத்தில் காதல் திருமணம் முடித்தது பல சர்ச்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜ்கிரனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.