தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
அதேசமயம் குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இவர் அடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குறுகிய காலத்திலேயே சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பிரியங்கா அருள் மோகன், குடும்ப பாங்கான நடிகையாக அடக்கமாக காணப்பட்டார்.
ஆனால் பிரியங்கா மோகன் சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவ்வகையில் தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
