“வெறும் 50 ஆயிரத்துக்காக 12 வருட மனைவியை விற்ற கணவன்…”ரகசிய அறையில் 7 நாட்கள் நடந்த கூட்டு பலாத்காரம்…”மனைவியை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட்…தாலி கட்டிய கணவன் ஆடிய பயங்கர நாடகம் அம்பலம்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வெறும் 50 ஆயிரத்துக்காக 12 வருட மனைவியை விற்ற கணவன்…”ரகசிய அறையில் 7 நாட்கள் நடந்த கூட்டு பலாத்காரம்…”மனைவியை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட்…தாலி கட்டிய கணவன் ஆடிய பயங்கர நாடகம் அம்பலம்…!

Published

on

குஜராத் மாநிலம் பலான்பூர் நகரில், பண ஆசைக்காகத் தனது 12 ஆண்டு கால மனைவியையே நண்பர்களிடம் விற்று, 7 நாட்களாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவனின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த நிகேஷ் பட்டேல் என்பவர், தனது மனைவியைக் காணவில்லை என்று உள்ளூர் காவல் நிலையத்தில் நாடகமாடிப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நிகேஷ் பட்டேலிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்து தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்தப் பெண் காணாமல் போகவில்லை என்றும், அவசரப் பணத் தேவைக்காக அவரது கணவனே நண்பர்களிடம் விற்ற அதிர்ச்சி உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது.

கைதான நிகேஷ் பட்டேலுக்குத் தனது மனைவியைப் பிடிக்காததால், அவரிடம் எப்போதும் சண்டையிட்டு வந்துள்ளார். இதற்கிடையே ஏற்பட்ட பண நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்ட அவர், சஞ்சய் தாகூர், அஷோக் தாகூர் மற்றும் சச்சின் தாகூர் ஆகிய தனது நண்பர்களிடம் வெறும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மனைவியை விற்றுள்ளார்.

Advertisement

அந்தப் பெண்ணை ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்த அந்த கும்பல், தொடர்ந்து 7 நாட்களாக மிருகத்தனமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பசியாலும் வலியாலும் அந்தப் பெண் அலறியபோதும் இரக்கமின்றி அத்துமீறியதோடு, அவர் அணிந்திருந்த தங்கக் காதணிகளையும் பலவந்தமாகப் பறித்துச் சென்றுள்ளனர். உண்மை தெரிந்ததும் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், அந்தப் பெண்ணை அதிரடியாக மீட்டு தகுந்த மருத்துவ உதவியும், மனநல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய துணை போலீஸ் சூப்பிரெண்டு கேமித், கைதான நிகேஷ் பட்டேல் ஒரு சைக்கோ மனநிலையுடன் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிந்த நிலையிலும், அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார். மனைவியைப் பிடிக்காததால் விவாகரத்து செய்ய நினைத்தவர், அதனால் பணம் கிடைக்காது என்பதால் குறுக்கு வழியில் மனைவியை விற்றுப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், அந்தப் பணத்தைக் கொண்டு வேறொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து வாழ நினைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய கணவர் நிகேஷ் பட்டேல் மற்றும் அவனது நண்பர்கள் உட்பட மொத்தம் 10 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in