LATEST NEWS
தேவையா இந்த வெட்டி சீன்..? கார் கூரை மீதே ஏறி நின்று பட்டாசு வெடித்த விபரீதம்… உள்ளே விழுந்த ஒரே ஒரு பொறி.. நொடிப்பொழுதில் கொழுந்துவிட்டு எரிந்த வாகனம்..! ராஜஸ்தான் திருமண ஊர்வலத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலத்தின் தீக் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தின் போது, காரின் கூரை மீது பட்டாசுகளைக் கொளுத்தியதால் கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமான சம்பவம் நடந்துள்ளது. ஹரியானாவின் துனேலா-சோஹ்னா பகுதியில் இருந்து இந்த திருமண ஊர்வலம் வந்தபோது, ஜுர்ஹாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோசிங்கா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஊர்வலத்தில் வந்த சிலர் காரின் கூரை மீது ஏறி நின்று பட்டாசுகளைக் கொளுத்தத் தொடங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, எரியும் பட்டாசு அல்லது அதில் இருந்து வெளிவந்த ஒரு பொறி காரின் உட்பகுதிக்குள் விழுந்துள்ளது.
இதனால் கார் முழுவதும் மிக வேகமாக தீ பரவி, சிறிது நேரத்திலேயே அது தீப்பிழம்பாக மாறியது. இந்த திடீர் சம்பவத்தால் ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களிடையே பெரும் அச்சமும் பதற்றமும் நிலவியது. இச்சம்பவத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா அல்லது சேத விவரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
