LATEST NEWS
“அடப்பாவி இப்படி போட்டு கொடுத்துட்டியே” என் வேலையே போச்சு… ஊழியர் லேட்டா வந்ததை நோட் பண்ணி ஓனரிடம் காட்டி கொடுத்த AI.. உலகளவில் வைரலாகும் சம்பவம்..!!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ‘ஆண்டன் மார்க்கெட்’ என்ற சில்லறை விற்பனைக் கடையில், மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த சம்பவம் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக அரங்கேறியுள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ‘கிளாட்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, இக்கடையின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக ‘லூனா’ என்ற ஏ.ஐ. மேலாளர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.ஐ. மேலாளருக்கு வரவு-செலவு கணக்குகளைப் பார்ப்பது, இணைய வசதியைக் கையாளுவது மற்றும் ஒட்டுமொத்த கடையை நிர்வாகம் செய்வது போன்ற மிக முக்கிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் 17 முறை பணிக்குத் தாமதமாக வந்ததையும், வேலை நேரத்தின் போது வெளியே சென்றது உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளையும் ‘லூனா’ மிகத் துல்லியமாகக் கண்காணித்துள்ளது.
ஊழியரின் இந்தத் தொடர் விதிமீறல்களைக் கண்டறிந்த ஏ.ஐ. மேலாளர், அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தது. இந்த ஏ.ஐ. பரிந்துரையை ஆண்டன் லேப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, அந்த ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ள நிகழ்வு தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
