CINEMA
நம்ம ஓவியாவா இது…? முகம் சுருங்கி எப்படி இருக்காங்க பாருங்க… ரசிகர்கள் ஷாக்…!!

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு , மெரினா, மூடர்கூடம், மதயானை கூட்டம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஓவியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.படங்களில் நடித்து கிடைத்த பிரபலத்தை விட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்று அறிமுகப்படுத்தியதே நடிகை ஓவியா ரசிகர்கள் தான்.
இவர் பிக் பாஸ் வீட்டில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.இந்நிகழ்ச்சியின் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் நடிப்பில் 90 எம்.எல்., கணேசா மீண்டும் சந்திப்போம், ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் ஓடவில்லை. இப்போது ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
View this post on Instagram