அதிமுக-வுக்கு அடுத்த ஆப்பு ரெடி… அமைச்சர் செங்கோட்டையனை ரகசியமாக சந்தித்த MLA லீமா ரோஸ்.. தவெகவுக்கு தாவுகிறார்..? பரபரப்பில் அரசியல் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுக-வுக்கு அடுத்த ஆப்பு ரெடி… அமைச்சர் செங்கோட்டையனை ரகசியமாக சந்தித்த MLA லீமா ரோஸ்.. தவெகவுக்கு தாவுகிறார்..? பரபரப்பில் அரசியல் வட்டாரம்..!!

Published

on

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை பெறாததால், பிற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வருகின்றனர். இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் உட்பட 6 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி உட்பட மொத்தம் 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, மேலும் பல எம்எல்ஏக்களை இழுத்து சட்டசபையில் தவெக-வின் பலத்தை 118 இடங்களாக உயர்த்த அக்கட்சி வியூகம் வகுத்து வருகிறது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், சென்னை தலைமைச் செயலகத்திற்கு திடீரென வருகை தந்தார். அங்கிருந்த வருவாய்த்துறை அமைச்சரும், தவெக முக்கிய நிர்வாகியுமான செங்கோட்டையனை அவரது அறையில் சந்தித்து சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக ரகசியமாகப் பேசினார். இந்த திடீர் சந்திப்புக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதையும் இரு தரப்பினரும் வெளியிட மறுத்துவிட்டனர்.

Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தியால், தேர்தலுக்கு முன்பே தவெக-விற்கு தாவி அமைச்சரானவர் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தவெக-வை ‘களவாணி’ என்று விமர்சித்து வரும் வேளையில், அதிமுக பெண் எம்எல்ஏ லீமா ரோஸ் தவெக அமைச்சரைச் சந்தித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் போன்ற முன்னணி தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதால், அதிமுகவில் அடுத்தடுத்து கட்சி தாவல்கள் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in