கணவர் இல்லாமல் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய மீனா…. எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க…. வெளியான வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

கணவர் இல்லாமல் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய மீனா…. எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க…. வெளியான வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த வருடம்  ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தனது கணவரின் இழப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா மீண்டு வருகிறார்.

Advertisement

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மீனா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் மீனா தனது செல்ல மகளின் பிறந்தநாளை கணவர் இல்லாமல் நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். கடலில் கப்பலில் தனது செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாடிய மீனா அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in