பாஸ் இன்னும் டெண்டரே முடிவாகல.. அதுக்குள்ள எப்படி டெண்டரில் முறைகேடுன்னு சொல்றீங்க..? எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடிப் பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாஸ் இன்னும் டெண்டரே முடிவாகல.. அதுக்குள்ள எப்படி டெண்டரில் முறைகேடுன்னு சொல்றீங்க..? எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடிப் பதிலடி..!!

Published

on

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் அறை மாற்றத்திற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறேகடு நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில் விரிவான விளக்கம் அளித்தார்.

முதலமைச்சருக்குப் புதிய அறை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட டெண்டர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெளிவுபடுத்தினார். டெண்டர் நடைமுறைகளே இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதில் முறைகேடு நடந்துள்ளதாகப் பத்திரிகைகளில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

வெறும் நாளிதழ் செய்திகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவையில் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், அரசு நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் சட்டவிதிகளுக்கு உட்பட்டே நடைபெற்று வருகின்றன என்று எ.வ.வேலுவின் குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுத்தார்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in