வெறும் 4 மாதங்களில் 22 பேருக்குத் தூக்குத் தண்டனை… நடுங்கிப்போன குற்றவாளிகள்.. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெறும் 4 மாதங்களில் 22 பேருக்குத் தூக்குத் தண்டனை… நடுங்கிப்போன குற்றவாளிகள்.. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதியான ரவி குமார் திவாகர், மிகக் குறுகிய காலமான கடந்த நான்கு மாதங்களில் 10 வெவ்வேறு வழக்குகளை விசாரித்து மொத்தம் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13 அன்று ஷாம்லி மாவட்டத்தில் பதிவான பவன் குமார் கொலை வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டதும், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் சலீம் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வுகளாகும். மேலும், 2011 விவசாயி கொலை விவகாரம், தேர்தல் முன்விரோத மோதல்கள் மற்றும் ஹோம் கார்டு படுகொலை போன்ற பல திடுக்கிடும் வழக்குகளிலும் இவர் அதிரடியான தீர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியமெனக் கருதப்பட்டாலும், குறுகிய கால இடைவெளியில் இத்தனை மரண தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் மத்தியில் விவாதங்களையும் ஆழ்ந்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த 46 வயதான நீதிபதி ரவி குமார் திவாகர், 2009ஆம் ஆண்டு அசாம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியைத் தொடங்கி பல்வேறு இடங்களில் பணியாற்றிய பின், 2025 நவம்பர் முதல் முசாபர்நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக, 2022இல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோகிராபி ஆய்வு நடத்த உத்தரவிட்டதன் மூலம் இவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in