இந்த இருக்கை, மைக் எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சவன் நான்… பேரவையில் பெருமிதமாக பேசிய எ.வ வேலு.. அது யாருடைய பணம் சார்.? மாஸ் பதிலடி கொடுத்த ராஜ்மோகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த இருக்கை, மைக் எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சவன் நான்… பேரவையில் பெருமிதமாக பேசிய எ.வ வேலு.. அது யாருடைய பணம் சார்.? மாஸ் பதிலடி கொடுத்த ராஜ்மோகன்..!!

Published

on

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவையின் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவையில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அமரும் இருக்கைகள், மேஜைகள், மைக் போன்ற அனைத்தையும் திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து பார்த்துப் பார்த்துச் செய்தவன் நான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எ.வ.வேலுவின் இந்த உரைக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், அவையிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டது என்று திட்டவட்டமாகக் கூறினார். தனிநபர் பெருமையாக இதனைப் பேசத் தேவையில்லை என்றும், மக்கள் பணமே இதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

இருதரப்பிலும் வைக்கப்பட்ட இந்த வாதங்களால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அரசுப் பணிகள் மற்றும் மக்கள் வரிப்பணம் தொடர்பான இந்த விவாதம், அவையில் இருந்த பிற உறுப்பினர்களிடையேயும் மிகுந்த கவனத்தைப் பெற்றது.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in