அதை பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க… ஆனந்த் அண்ணனை நாளைக்கு கவனிச்சுக்கோங்க… பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த கலகலப்பான மிரட்டல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதை பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க… ஆனந்த் அண்ணனை நாளைக்கு கவனிச்சுக்கோங்க… பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த கலகலப்பான மிரட்டல்..!!

Published

on

தமிழக சட்டமன்றத்தில் நீர்வளத்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர் ஒருவர் மேடையில் முன்வைத்துப் பேசினார். ஆனால், அந்த உறுப்பினர் நீர்வளத்துறைக்குப் பதிலாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் இந்தத் துறையின் கோரிக்கைகளைக் கேட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்.

இதனைக் கவனித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக எழுந்து, “ஆனந்த் அண்ணன்கிட்ட (நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆனந்த்) கேட்க வேண்டிய கோரிக்கையை எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க” என்று கலகலப்பாகக் குறிப்பிட்டார். மேலும், “இப்போது பொதுப்பணித்துறையைப் பற்றிப் பேசினால் என்னோட விளக்க உரைக்குப் பதிலளிக்க உதவியாக இருக்கும்; ஆனந்த் அண்ணனை நாளைக்குக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று நகைச்சுவையோடு பதிலளித்தார்.

Advertisement

அமைச்சரின் இந்தச் சமயோசிதமான மற்றும் கலகலப்பான பதிலைக் கேட்டு அவையில் இருந்த முதலமைச்சர் விஜய் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பலத்த சிரிப்பொலி எழுப்பினர். இதனால் நீட் தேர்வு உள்ளிட்ட விவாதங்களால் அதுவரை காரசாரமாக இருந்த சட்டமன்றக் களம், சற்று நேரம் சுவாரசியமான சிரிப்பலையாக மாறியது.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in