LATEST NEWS
“என்னாது 3 வருஷமா கிடப்புல இருக்கா?” ஐயா நான் பிறந்தது திருச்சி… கன்பியூஸ் ஆன எ.வ வேலு… பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா… சட்டப்பேரவையில் பரபரப்பு..!!
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிறந்தது அன்றைய வட ஆற்காடு, தற்போதைய வேலூர் மாவட்டம் என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார். ஆனால், இந்தத் தகவலை உடனடியாக மறுத்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தான் பிறந்தது திருச்சி மாவட்டம் என்று தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரியாரைப் பற்றிப் பேசும் நீங்கள், கடந்த 3 ஆண்டுகளாக அவரைக் கிடப்பில் போட்டுவிட்டீர்கள் எனத் தவறுதலாகக் கூறினார். உடனே அருகில் இருந்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அது 3 ஆண்டுகள் அல்ல, 3 மாதங்கள் என்று சுட்டிக்காட்டியதை அடுத்து, ஆதவ் அர்ஜுனா தனது பேச்சைத் திருத்திக்கொண்டார்.
மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்னும் தந்தை பெரியாரின் சிலை நிறுவப்படவில்லை என்று ஆதவ் அர்ஜுனா மேடையில் வெளிப்படையாகக் கூறியது அங்கிருந்தவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
