நீங்க ரொம்ப தூய்மையானவங்கன்னு சொல்றீங்க..? ஆனால், டெண்டரில் முறைகேடு எப்படி.? தவெக அரசை அலறவிட்ட எ.வ வேலு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீங்க ரொம்ப தூய்மையானவங்கன்னு சொல்றீங்க..? ஆனால், டெண்டரில் முறைகேடு எப்படி.? தவெக அரசை அலறவிட்ட எ.வ வேலு..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார். “நாங்கள் தூய்மையானவர்கள்” என்று கூறிவிட்டு, முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலக அறையை மாற்ற வேண்டிய அவசியம் தற்போது என்ன வந்தது என்று கேள்வி எழுப்பினார். பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் பின்னரே இணையதளத்தில் இதற்கான டெண்டர் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளதாக நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி அவர் பேரவையில் வாதிட்டார்.

Advertisement

இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த டெண்டர் நடைமுறைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றும், வெறும் பத்திரிகைச் செய்திகளை மட்டும் நம்பி அவையில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கூறினார். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள் குறித்து விரைவில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in