LATEST NEWS
பாஜக, காங்கிரஸ் ரெண்டும் வேறவேற ஆளுங்க.. ஆனா உடம்புல ஓடுறது ஒரே ஜீன்… உங்களுக்கு விட்டா போச்சா..? தேசியக் கட்சிகளின் முகத்திரையைக் கிழித்த சி.வி.சண்முகம்..!!
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில், திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம், இரு கட்சிகளின் மீதும் பாய்ந்து ஆவேசமாகப் பேசி அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களை வேறு வேறானவர்கள் போலக் காட்டிக் கொண்டாலும், அவர்கள் உடம்பில் ஓடுவது ஒரே மாதிரியான ஜீன் தான்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். இவர்கள் மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்காமல், சுயநல அரசியல் செய்வதற்கு மட்டுமே இந்த நீட் தேர்வைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நீட் தேர்வு விவகாரத்தில் இரு தேசியக் கட்சிகளுமே பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நீட் தேர்வை ஒழிக்க உண்மையான முயற்சிகளை எடுக்காமல், அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள் என்று சி.வி.சண்முகம் ஆவேசமாக வாதிட்டார்.
