குடிபோதையில் நடந்த பயங்கரம்… கூட்டத்தில் டிராக்டரை ஏற்றி 3 பேர் கொடூரக் கொலை… நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடிபோதையில் நடந்த பயங்கரம்… கூட்டத்தில் டிராக்டரை ஏற்றி 3 பேர் கொடூரக் கொலை… நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம், சந்த்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ததியானா கிராமத்தில் உள்ள மதுபானக் கடை அருகே புதன்கிழமை இரவு ஒரு பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. ததியானா மற்றும் ஜமாலுதீன்பூர் கிராமங்களைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே மதுபானக் கடைக்கு அருகே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கை கலப்பாக மாறியுள்ளது.

வாக்குவாதம் தீவிரமடைந்ததால் ஆத்திரமடைந்த ததியானா கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திரா என்ற நபர், மதுபோதையில் தனது டிராக்டரை எடுத்து வந்துள்ளார். ஜமாலுதீன்பூர் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த எதிர்த் தரப்பைச் சேர்ந்த மக்கள் மீது கொடூரமான எண்ணத்துடன் அதிவேகமாக டிராக்டரை ஏற்றியுள்ளார்.

Advertisement

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஜமாலுதீன்பூரைச் சேர்ந்த உதயவீர், ஜெய்சந்த் மற்றும் மகேந்திரா ஆகிய மூன்று கிராமவாசிகளும் டிராக்டரில் நசுங்கிப் பலத்த காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களைச் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மக்களை நசுக்கிய பிறகு தப்பியோட முயன்ற வீரேந்திராவின் டிராக்டர், அதிக வேகம் மற்றும் போதை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காயமடைந்த குற்றவாளி வீரேந்திராவை மீட்டுப் போலிசார் மருத்துவமனையில் அனுமதித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in