80 ஆவது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இசை ஜாம்பவான் இளையராஜா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

80 ஆவது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இசை ஜாம்பவான் இளையராஜா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

Published

on

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இசையால் காட்டி போட்டு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா.

இவரின் இசைக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் பல பாடல்களும் இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

Advertisement

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் இதுவரை ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அனைவருடனும் இவர் பணியாற்றியுள்ளார்.

Advertisement

இசைஞானி மற்றும் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் இளையராஜா தமிழ் சினிமாவை தனது கைக்குள் வைத்துள்ளார்.

இவர் 1986 ஆம் ஆண்டு முதல் முதலில் தமிழ் திரைப்படப் பாடலை கணினி மூலமாக பதிவு செய்து சாதனை படைத்தார்.

Advertisement

இதனிடையே இளையராஜாவிற்கு ஜீவா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு கார்த்தி ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இளையராஜாவின் மனைவி கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார். இதனிடையே இளையராஜா நேற்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

தற்போது இளையராஜாவின் 80 வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in