LATEST NEWS
GOAT படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா..? ரிலீசுக்கு முன்னரே கெத்து காட்டும் விஜய்..!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.
மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகின்றனர். விஜய் தனது 69 ஆவது படத்தில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழையப் போவதாக தெரிவித்து தனது கட்சி பெயரையும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட் திரைப்படம் உருவாகிறது. இந்த நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் கோட் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிறுவனம் கோட் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பதிப்புகளுக்கு 125 கோடி ரூபாயும் ஹிந்தி பதிப்பிற்கு தனியாக 25 கோடி ரூபாயும் கொடுத்து மொத்தம் 150 கோடி ரூபாய்க்கு கோட் படத்தின் வெளியிடும் உரிமையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக ரிலீசுக்கு முன்னரே ஓடிடி தளத்திற்கு 150 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி கோட் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

#image_title
