LATEST NEWS
விஜயின் 69-ஆவது படத்தின் இயக்குனர் இவர்தானா..? மீண்டும் விஜயுடன் ஜோடி சேரும் பிரபல ஹீரோயின்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.
மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகின்றனர். விஜய் தனது 69-ஆவது படத்தில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழையப் போவதாக தெரிவித்து தனது கட்சி பெயரையும் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை இயக்க போவது யார் என ஏராளமானோர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை விஜய் யாருக்கும் ஓகே சொல்லவில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் சங்கர், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் விஜயின் 69-வது படத்தை இயக்க போவதாக செய்திகள் வலம் வந்தது. ஆர்.ஜே பாலாஜி கடைசியாக மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் அவரது கதைக்கு ஓகே சொல்லாமல் விஜய் ரிஜெக்ட் செய்ததாக தெரிகிறது.
கடைசியாக தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு வெற்றி படங்களை கொடுத்த அட்லீ தான் விஜயின் 69-ஆவது படத்தை இயக்க போகிறார் என கூறப்படுகிறது. மேலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க போவதாகவும் செய்திகள் உலா வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகவில்லை. தளபதியின் 69-ஆவது படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.