LATEST NEWS
என்ன தலைவரே நீங்களே இப்படி பண்ணலாமா..? அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் பணி பெண்ணை ஒதுக்கி வைத்த ரஜினி.. வைரலாகும் வீடியோ..!!
முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஃபுல் படம் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முதல் நாள் மாலை பிரபல பாடகி ரிஹானாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் மக்களில் ஒருவன் என பேசி எப்போதும் பணிவுடன் நடந்து கொள்வார். ஆனால் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு ரஜினி தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் வந்துள்ளார். அப்போது புகைப்பட கலைஞர்கள் போட்டோ எடுப்பதை பார்த்தவுடன் தங்களுடன் வந்த பணி பெண்ணை தள்ளிப்போ என ரஜினி கூறுகிறார்.
உடனே அந்த பெண்ணும் அங்கிருந்து நகர்ந்து நிற்கிறார். இதனை பார்த்த பொதுமக்கள் எல்லாரும் சமம் என்ற ரஜினி கூறுவது சும்மா தானா? ஏன் இப்படி பணிப்பெண்ணை அவமரியாதையாக நடத்துகிறார்? என கமெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.