LATEST NEWS
மாதவன்-கங்கனா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்.. அதுக்கு காரணமே இயக்குனர் தானா..? ஒருவேளை உண்மையா இருக்குமோ..!!

பிரபல நடிகரான மாதவன் மணி ரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட திரைப்படங்களில் மாதவன் நடித்துள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ஆயுத எழுத்து, இறுதி சுற்று உள்ளிட்ட பல்வேறு படங்கள் மாதவனுக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது ஏ.எல். விஜய் இயக்கத்தில் மாதவன் ஒரு படத்தில் நடித்து வந்தார்.
அவருக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடித்தார். அந்தப் படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு அன்னபூரணி படம் தோல்வியடைந்ததால் பொருளாதார பிரச்சினை, கங்கனாவின் பட தோல்வி சர்ச்சை என அடுத்தடுத்த வதந்திகள் பரவியது.
ஆனால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு ஏ.எல் விஜய் தான் காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் இயக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெறுகிறதாம். அதனை முடித்துவிட்டு மீண்டும் மாதவன் நடிக்கும் படத்தை விஜய் இயக்குவார் கூறப்படுகிறது.