“தமிழ்நாடு சம்பளம்… ஆந்திராவுக்கு விசுவாசமா..?” தொழில்துறையின் முக்கிய ரகசியங்கள் ஆந்திராவுக்கு லீக்..? 15 ஒப்பந்த அதிகாரிகளைத் தூக்கியடித்த தமிழக அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தமிழ்நாடு சம்பளம்… ஆந்திராவுக்கு விசுவாசமா..?” தொழில்துறையின் முக்கிய ரகசியங்கள் ஆந்திராவுக்கு லீக்..? 15 ஒப்பந்த அதிகாரிகளைத் தூக்கியடித்த தமிழக அரசு..!!

Published

on

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் சென்றது தொடர்பான சர்ச்சையில், ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 15 அதிகாரிகள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் குறித்த முக்கிய ரகசியத் தகவல்கள் ஆந்திராவிற்குக் கசிந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்துறையில் இருந்துகொண்டே ஆந்திராவிற்கு ஆதரவாகச் செயல்பட்ட ‘உளவாளிகள்’ இவர்களா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

இதற்கிடையில், பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரில் மூவர் தற்போது ஆந்திர மாநிலத் தொழில்துறையில் பணியாற்றி வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தொழில்துறை வட்டாரத்தில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in