சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.
அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடிப்பையும் தாண்டி தனியார் நிகழ்ச்சிகள் செல்வது மற்றும் போட்டோ ஷூட் நடத்துவது என தினம் தோறும் புதுவிதமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றன.
அவ்வகையில் தற்போது தங்களின் குழந்தைகளுக்காக ஒரு புதிய youtube பக்கம் திறந்து உள்ளனர். அது அது குறித்து வீடியோ வெளியிட அதில் அவர்களின் மகனை கண்ட ரசிகர்கள் அட இவர்களின் மகனா என்று கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.