#image_title

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும். சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்.

நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்த அசத்தார். அடுத்ததாக மாமன்னன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வரும் வடிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வடிவேலுக்கு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.