தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திலும் சண்டைக்காட்சி மாஸ்டராகவும் பிரபலமானவர் பெசன்ட் ரவி. இவர் 1970 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்தவர்.

இவர் தமிழ், ஹிந்தி போன்ற பல மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசைத்தி உள்ளார். சென்னையில் பிறந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

அதை தொடர்ந்து பெசன்ட் நகரில் தனது வீட்டிற்கு அருகில் திரைப்பட சூட்டிங் நடந்து வரும்போது அங்கு சென்று பார்ப்பாராம்.

மேலும் அவர்களுடன் சேர்ந்து பழகி படபிடிப்பு குழுவில் உள்ள கலைஞர்களுடன் சேர்ந்து பேசி எப்படியாவது சினிமாவிற்குள் நுழைந்து விட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார்.

இவருக்கு தற்காப்பு கலை மற்றும் குத்துச்சண்டை என அனைத்தும் தெரியும். இவர் லக்கி மேன் என்ற திரைப்படத்தின் மூலமாக மக்களால் அறியப்பட்டார். பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.


இயக்குனர் சங்கரின் முதல்வன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து குஷி, தீனா, ஆனந்த், ஏழுமலை, அகரம், சின்னா, கபடி கபடி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், தெனாலிராமன், காக்கிச்சட்டை, கோலி சோடா, யூத் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.


அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வேயர் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.


இவரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…
