தமிழ் சினிமாவில் பல திரைப்படத்தில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் டானியல் பாலாஜி.

வேட்டையாடு விளையாடு பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

அதற்கு முன்னதாக 2000 ஆண்டு வெளியான சித்தி என்ற சீரியல் மூலமாக தனது திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

அந்த சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகே வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதம் என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

நடிகர் டானியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டானியல் பாலாஜி ஒரு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை ஆவடியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கட்டி வைத்துள்ளார்.

இந்த கோயிலை தனது சொந்த செலவிலேயே அவர் கட்டியதாக கூறப்படுகின்றது. மேலும் இக்கோயிலின் கும்பாபிஷேகம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது.


இந்த கோயிலை அவர் தனது தாயின் ஆசைக்காக கட்டியுள்ளார். அவர் விருப்பப்பட்டார் என்பதற்காக இதை செய்துள்ளார்.

பல நடிகர்கள் தங்களின் தாய்க்காக கோவில் கட்டி வரும் நிலையில் அந்த வரிசையில் இந்த நடிகர் இணைந்துள்ளார்.

அவர் கோயிலில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பூஜையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
