LATEST NEWS
“PM மோடியை விமர்சிக்காதீங்க” திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் போட்ட திடீர் உத்தரவு… இணையும் பாஜக-திமுக..? அரசியலில் திடீர் பரபரப்பு…!!
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்க வேண்டாம் என்று திமுக எம்பிக்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இருந்தபடி அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்றும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த திடீர் அரசியல் நகர்வு காரணமாக, திமுக தற்போதைய பாஜாக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. லண்டன் கூட்டத்தின் பின்னணி மற்றும் இந்த முடிவின் உண்மைத்தன்மை குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளன.
