உங்க அமைச்சர்கள் 2 பேரை தலைதெறிக்க ஓட விட்டாங்களே.. அது தான் தவெக அரசின் 100 நாள் சாதனை…. ஆளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்ட திமுக பரந்தாமன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்க அமைச்சர்கள் 2 பேரை தலைதெறிக்க ஓட விட்டாங்களே.. அது தான் தவெக அரசின் 100 நாள் சாதனை…. ஆளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்ட திமுக பரந்தாமன்..!!

Published

on

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் இ. பரந்தாமன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். புதிய ஆட்சி தொடங்கிய போது அதனை ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனக் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 100 நாட்களில் 546 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதே இந்த அரசின் சாதனையாக உள்ளது என்று குற்றஞ்சாட்டினார். பெண்களுக்கான பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை பொதுமக்கள் அறிவார்கள் என்றும், காவல்துறையைக் கையிருப்பில் வைத்துள்ள அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தவெக அரசுக்கு ஆர்வத்துடன் வாக்களித்த ‘ஜென்-ஸி’ தலைமுறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கோவை சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் தொடர்பாகத் தகவல் அளித்த காரணத்திற்காக ஒரு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கு முதலமைச்சரே முழுப் பழியையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர் அமுதனின் தாயார் தற்போதைய ஆட்சியின் மீது நம்பிக்கையின்றி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் தங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இது ஆளும்கட்சியை விட எதிர்க்கட்சியான திமுக மீதே மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டுவதாகக் கூறிய அவர், திருவொற்றியூரில் தவெக அமைச்சர்கள் 2 பேரை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் ஆட்சியின் சாதனை எனச் சாடினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in