ஷாருக்கான் முதல் கவுண்டமணி வரை… சுதந்திர தின விழாவை கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷாருக்கான் முதல் கவுண்டமணி வரை… சுதந்திர தின விழாவை கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

நாடு முழுவதும் நேற்று 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை பாமர மக்கள் முதல் திரை பிரபலங்கள் அனைவரும் கொண்டாடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்றைய சுதந்திர தின விழா கொண்டாடிய திரை பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் வீட்டில் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.

Advertisement

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை காமெடியில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் கவுண்டமணி வெள்ளை நிற உடையில் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழ் சமீபத்தில் சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் சுதந்திர தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

சின்னத்திரை சீரியல் நடிகரான ராஜ்கமல் குடும்பத்துடன் சுதந்திர தின விழா கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராக்ஷி கண்ணா வீட்டில் கொடியேற்றி கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Advertisement

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக திகழும் கிருத்திகா அண்ணாமலை நடுக்கடலில் தேசிய கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் லெஜன்ட் சரவணன் குழந்தைகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.

Advertisement

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த வனிதா சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் தேசியக்கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கிய நடிகை குஷ்பூ வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வீட்டில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக திகழும் சித்ரா வீட்டில் தேசியக்கொடி ஏற்று சுதந்திர தின விழாவை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக திகழும் கஸ்தூரி தனது மகனுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in