பாக்கியலட்சுமி டீம் உடன் கேரளாவிற்கு ஜாலி ட்ரிப் சென்ற கம்பம் மீனா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பாக்கியலட்சுமி டீம் உடன் கேரளாவிற்கு ஜாலி ட்ரிப் சென்ற கம்பம் மீனா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி.  அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கம்பம் மீனா.

அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Advertisement

தற்போது துணை நடிகையாக இருக்கும் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் நடந்துள்ளது.

தன்னுடைய குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்ட் ஆக கம்பம் மீனா பணியாற்றியுள்ளார்.

Advertisement

மிகவும் தைரியமான பெண்ணாக வளம் வந்த இவர் அப்போதே தன்னுடைய சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெண்ணாக இருந்து வந்துள்ளார்.

அதன் பிறகு பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் இவரை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார். இவர் கிராமத்து வழக்கு முறையில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Advertisement

அதேசமயம் தெற்கத்தி பொண்ணு சீரியல் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இதுவரை தமிழில் கிட்டத்தட்ட 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி மற்றும் சகுனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள.

Advertisement

மேலும் மறைந்த இயக்குனர் தாமிராவின் இயக்கத்தில் இயக்குனர் கே பாலசந்தர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்த இரட்டை சுழி திரைப்படத்தில் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கே மருமகளாக நடித்த அசத்தினார்.

சிறுவயதில் தந்தையை இழந்து திருமணம் என்றாலும் தன்னுடைய வாழ்வில் பல தடைகளைக் கடந்து இன்று ரசிகர்கள் பலரும் கொண்டாடும் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிற்காக இனியாவுடன் சேர்ந்து கேரளா சென்றுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை கம்பம் மீனா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement