“₹50,000 முன்பணம்”.. 10 நாட்களாக டைகர் ஷெராஃப் வீட்டை நோட்டமிட்ட துப்பாக்கிச்சூடு கும்பல்.. போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“₹50,000 முன்பணம்”.. 10 நாட்களாக டைகர் ஷெராஃப் வீட்டை நோட்டமிட்ட துப்பாக்கிச்சூடு கும்பல்.. போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!!

Published

on

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலை நடத்திய மூன்று நபர்களும், இதற்காக ₹50,000 முன்பணம் பெற்றதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக, கடந்த சுமார் 10 நாட்களாக டைகரின் வீடு மற்றும் அவர் செல்லும் ஜிம் பகுதிகளை அந்த நபர்கள் தீவிரமாக நோட்டமிட்டு கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலுக்குப் பிரபல நிழல் உலக தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நடிகர் டைகர் ஷெராஃப் காயம் அடைந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல், பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in