LATEST NEWS
காஷ்மீர் ஓவர்… 75 நாட்கள் ஷூட்டிங் முடித்த சிவகார்த்திகேயனின் SK 21 படம்… வெளியான புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் 75 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற அந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களிலும் சென்னையிலும் கடைப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு காதலியாகவும் மனைவியாகவும் நடிக்கின்றார்.
இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கான வியாபாரம் பெரிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது காஷ்மீரில் நடந்து முடிந்த முதல் கட்ட படப்பிடிப்பு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க