கேரளாவில் யாரும் வைத்திராத சொகுசு காரை வாங்கிய நடிகர் ஃபஹத் ஃபாசில்.. விலை மட்டும் இத்தனை கோடியா?.. - Cinefeeds
Connect with us

CINEMA

கேரளாவில் யாரும் வைத்திராத சொகுசு காரை வாங்கிய நடிகர் ஃபஹத் ஃபாசில்.. விலை மட்டும் இத்தனை கோடியா?..

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்த கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் பகத் பாஸில். இவர் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த மிரட்டி இருந்தார். அந்தத் திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணமே இவரின் வில்லத்தனமான நடிப்பு என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக இவர் நடித்துள்ளார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது ட்ரெண்டிங் ஸ்டார் ஆக இருக்கும் இவர் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதனிடையே இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது காதல் மனைவியுடன் ஒன்பதாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய நிலையில் அப்போது பகத் பாசில் புதிய கார் ஒன்றை வாங்கினார் .

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய மாடல் காரை பகத் பாஸில் வாங்கிய நிலையில் இதன் விலை சுமார் மூன்று கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ள நிலையில் தற்போது புதிய காரை வாங்கியுள்ள இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Indiaglitz Tamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indiaglitz_tamil)