CINEMA
வெள்ளித்திரையில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நடிகை ஹேமா.. அதுவும் இந்த ஹீரோவுடனா?.. செம குஷியில் ரசிகர்கள்..!!!

சமீபகாலமாக சின்ன திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன. அதன்படி பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் பலரும் தற்போது வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்து கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வாணி போஜன் சன் டிவி சீரியலில் நடித்த பிரபலமாகி அதன் மூலம் தான் வெள்ளி திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றினார். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து சன் டிவி சீரியல் நடிகை வெள்ளி திரையில் தற்போது ஹீரோயினியாக நுழைய உள்ளார்.
அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற சீரியலில் நடித்து வரும் ஹேமா பிந்து ஏற்கனவே கலர்ஸ் டிவியில் இதயத்தை திருடாதே என்ற சீரியலிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் அதன் பிறகு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் நடிகையாக மாறினார். தற்போது கவுண்டமணி பல வருடங்கள் கழித்து கதையின் நாயகனாக நடித்து வரும் ஒத்த ஓட்டு முத்தையா என்ற திரைப்படத்தில் தான் ஹேமா பிந்து கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்ட போது அதில் ஹேமா கலந்து கொண்ட நிலையில் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.