நடிகை தமன்னாவின் பெற்றோரை பார்த்துள்ளீர்களா?… திருமணநாள் வாழ்த்து தெரிவித்து அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகை தமன்னாவின் பெற்றோரை பார்த்துள்ளீர்களா?… திருமணநாள் வாழ்த்து தெரிவித்து அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். குறிப்பாக காவலா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி கொண்டிருக்கிறது. சினிமாவிற்கு வந்து 18 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாகவே தமன்னா இருந்து வருகின்றார். தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தவிர பல படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இதனிடையே பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் இணையத்தில் வெளியானது. அது மட்டுமல்லாமல் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது.

அதனை உறுதி செய்யும் விதமாக கடந்த வாரம் விமான நிலையத்தில் நடிகர் விஜய் வர்மா மற்இதனிடையே சினிமாவில் பிஸியாக இருந்து வரும் தமன்னா இணையத்திலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது தனது அப்பா அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தற்போது தமன்னாவின் பெற்றோர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.