ஜெயிலரின் வரலாற்று வெற்றி… ரஜினியை நேரில் சந்தித்து செக் வழங்கிய கலாநிதி மாறன்.. இவ்வளவு கோடியா.?? - Cinefeeds
Connect with us

CINEMA

ஜெயிலரின் வரலாற்று வெற்றி… ரஜினியை நேரில் சந்தித்து செக் வழங்கிய கலாநிதி மாறன்.. இவ்வளவு கோடியா.??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் தலைவர் 170 படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ள நிலையில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வசூலை முறியடித்து படம் முன்னேறி வருகிறது. இந்நிலையில் இந்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினியை தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நேரில் சந்தித்து செக் ஒன்றை கொடுத்துள்ளார். சென்னை மந்தவெளி கிளையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் இருந்து 100 கோடிக்கான காசோலை உள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளது.