இப்படி ஒரு ரசிகரா?…. வீட்டில் நடிகை சமந்தாவிற்காக கோவில் கட்டிய தீவிர ரசிகர்…. வெளிவந்த புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படி ஒரு ரசிகரா?…. வீட்டில் நடிகை சமந்தாவிற்காக கோவில் கட்டிய தீவிர ரசிகர்…. வெளிவந்த புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Advertisement

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக  சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை.

இந்த திரைப்படத்திற்காக சமந்தா தீவிர பிரமோஷனல் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதற்கு அவ்வளவு அதிகமாக பலன் எதுவும் கிடைக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் சமந்தாவிற்கு சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் ஆந்திராவில் கோவில் கட்டி உள்ளார். இது தொடர்பாக அவர், சமந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலமாக பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது எனக்கு மதிப்பு கூடியது.

இதனால் அவருக்கு கோவில் கட்ட தீர்மானித்து எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோவில் கட்டி வருகிறேன் என கூறினார். இந்நிலையில் கோவிலின் மையப் பகுதியில் சமந்தாவின் மார்பளவு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.

Advertisement

சமந்தாவின் பிறந்த நாளான நேற்று கோவிலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Filmy Focus | తెలుగు இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@filmyfocus)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in