LATEST NEWS
அந்த இடத்தில் தீராத வலி… துடிதுடித்த பிக்பாஸ் பாவனிக்கு அறுவை சிகிச்சை… ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!!
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி. தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அமீருடன் காதலில் சிக்கி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்ட நிலையில் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் தனக்கு கழுத்தில் அதிக வலி இருந்ததால் தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக கூறி புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
