LATEST NEWS
“கல்யாணம் ஆகிடுச்சா… அப்போ..” திருமணமான பெண்ணிடம் HR கேட்ட அந்த ஒரு அநாகரிகக் கேள்வி.. இணையத்தை உலுக்கிய இன்ஸ்டாகிராம் பதிவு..!!
வேலைவாய்ப்பு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பெண் ஒருவரிடம், மனிதவளத்துறை அதிகாரி எழுப்பிய தனிப்பட்ட மற்றும் அநாகரிகமான கேள்வி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சதகஷி திவேதி என்ற பெண்மணி தான் எதிர்கொண்ட இந்த சங்கடமான அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேர்காணலின் ஆரம்பத்தில் வழக்கமான தொழில்முறை சார்ந்த வினாக்களே எழுப்பப்பட்ட நிலையில், சதகஷிக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது என்ற விபரம் தெரியவந்ததும் அந்த அதிகாரியின் அணுகுமுறை முற்றிலும் மாறியுள்ளது. நேர்காணலின் மையக்கருவிலிருந்து விலகி, “உங்களுக்கு இப்போதைக்குப் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லையே?” என்று அந்த அதிகாரி நேரடியாகவே கேட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DegbR9tNrRy/?utm_source=ig_embed&ig_rid=AFsFS4C6jSCYXbnUditfHYb
இந்த எதிர்பாராத கேள்வியால் அதிர்ந்துபோன அந்தப் பெண், வேலைவாய்ப்பின் போது ஊழியரின் திறமையை அளவிடாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் குறிவைப்பது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார். பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தைப் பற்றிப் பேசும் நிறுவனங்களே, நேர்காணல் அறைகளில் இதுபோன்ற பாலின அடிப்படையிலான மற்றும் பொருத்தமற்ற கேள்விகளை எழுப்புவது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான பெண் பயனர்கள் தங்களது சொந்த வேலைவாய்ப்பு நேர்காணல் அனுபவங்களை வெளிப்படையாகப் பகிரத் தொடங்கினர்.
திருமணமாகாத பெண்களிடம் எப்போது திருமணம், திருமணமான பெண்களிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம், தாய்மார்களிடம் வேலைக்கும் குழந்தைகளுக்கும் எப்படி சமநிலைப்படுத்துவீர்கள் என வெவ்வேறு கட்டங்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற சங்கடமான கேள்விகள் எழுப்பப்படுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். வேலைக்கான தகுதியை மட்டும் ஆராய வேண்டிய இடங்களில், தனிப்பட்ட எல்லைகளை மீறும் வகையில் இதுபோன்று கேள்விகள் கேட்கப்படுவது அநாகரிகமானது என்று நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பெண்களின் தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இத்தகைய கார்ப்பரேட் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது.
