LATEST NEWS
அம்மாடியோ.. வீட்டுக்குள் எழும்பிய தீப்பிழம்புகள்… பயத்தில் உறைந்த பெண் டாக்டர்.. தேவதூதனாய் வந்த ‘அந்த’ நபர்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மருத்துவர் ஷிவாங்கி ஜோஷியின் வீட்டுச் சமையலறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருந்து, அங்கு பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பையன் ஒருவன் தனது துணிச்சலான செயலால் பெரும் துயரத்தைத் தடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமையலறையில் இருந்த பாத்திரம் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்து, தீப்பிழம்புகள் வேகமாகப் பரவியதைக் கண்ட மருத்துவர் ஷிவாங்கி என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் உறைந்து நின்றார். அந்தச் சமயம் தேவதூதனைப் போல வீட்டிற்கு வந்த டெலிவரி பையன், ஒரு நொடியும் தாமதிக்காமல் சமையலறைக்குள் புகுந்து தனது சமயோசித புத்தியால் தீயை உடனடியாக அணைத்து ஒரு மாபெரும் விபத்தைத் தடுத்துள்ளான்.
https://www.instagram.com/reel/DerkXfLh4OL/?utm_source=ig_web_button_share_sheet
தன்னையும் தனது வீட்டையும் பெரிய சேதத்திலிருந்து காப்பாற்றிய அந்த டெலிவரி பையனின் மனிதநேயமிக்க தைரியமான செயலை மருத்துவர் ஷிவாங்கி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “அவர் வெறுமனே பார்சலைக் கொண்டு வரவில்லை, கடினமான நேரத்தில் எனக்கு ஒரு மீட்பராக வந்து புதிய வாழ்க்கையையே தந்துள்ளார்” என்று அவரை மனமாரப் பாராட்டியுள்ளார். ஆபத்தான கட்டத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் உதவிய அந்த டெலிவரி பையனின் இந்தச் செயல், மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை உணர்த்துவதாகக் கூறி இணையவாசிகள் பலரும் அவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
