LATEST NEWS
இந்த மனசு தான் சார் கடவுள்…. 150 குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் என பன்முகம் கொண்ட கலைஞர் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்போது கதாநாயகனாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் நடிப்பில் வருகின்ற தமிழ் புத்தாண்டுக்கு ருத்ரன் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் பாலா குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதை அறிந்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு சுமார் பத்து லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார்.
அவரின் இந்த செயல் நிகழ்ச்சிக்கு வந்த பலரையும் வியக்க வைத்தது. ராகவா லாரன்ஸ் பொதுவாக இறக்க குணம் கொண்டவர் என்பதை அனைவரும் அறிந்தது தான். இவர் தத்தெடுக்கும் மனிதர்களின் இவரின் திரைப்படங்களில் சில சில இடங்களில் வந்து விட்டு செல்வார்கள்.
இதனைப் போலவே பாலாவையும் இனிவரும் திரைப்படங்களில் எதிர்பார்க்கலாம். இதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் சுமார் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என ட்விட்டரில் ஒரு பதிவை ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
